கால்நடை மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஓதுக்கீட்டு இடங்கள் அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 18, 2023

Comments:0

கால்நடை மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஓதுக்கீட்டு இடங்கள் அறிவிப்பு!



கால்நடை மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஓதுக்கீட்டு இடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பாராமரிப்பு பட்டப்படிப்பில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 100 இடங்களும், சேலம் தலைவாசல் கூட்டுரோடு, தேனி வீரப்பாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா 80 இடங்களும் என மொத்தம் 660 இடங்கள் உள்ளது.

உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் (பிடெக்) கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்களும், ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பிடெக்) 40 இடங்களும், கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் பால்வளத் தொழில்நுட்ப பட்டபடிப்பில் 20 இடங்களும் நிரப்பட உள்ளது. கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக ஜூன் 12 முதல் 30 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் சேர்க்கை நடைபெற்றது. இந்த நிலையில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் சேர்வதற்கு 18,752 மாணவர்களும், பிடெக் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கு 3,783 மாணவர்கள் என மொத்தம் 22,535 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் 26ம் தேதி வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து பிவிஎஸ்சி மற்றும் ஏஎச் இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல், பிடெக் உணவுத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் சிறப்பு பிரிவினரான விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ படை வீரர்களின் வாரிசுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கலந்தாய்வு நேற்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது. அதில் 36 இடங்கள் நிரப்பப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 17) அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் (பிவிஎஸ்சி மற்றும் ஏஎச்) இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல், பிடெக் உணவுத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் படிப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தரவரிசைப்படி கலந்தாய்வு நடத்தப்பட்டது.மேலும், மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு உத்தரவுகனை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வக்குமார் வழங்கினார்.அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,“அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. அதில் இளநிலை கால்நடை மருத்துவப்படிப்பில் கலையியல் பிரிவில் 109 மாணவர்கள் அழைக்கப்பட்டதில் 60 மாணவர்களும், தொழிற்கல்விப்பிரிவில் 8 மாணவர்களும் கலந்துக் கொண்டனர். பிடெக் உணவுத் தொழில்நுட்பம், கோழியினத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில் நுட்பப் படிப்பிற்கு 59 மாணவர்களுக்கு அழைப்பு அளிக்கப்பட்டதில் 9 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இளநிலை கால்நடைமருத்துவ அறிவியியல் படிப்பில் 45 இடங்களிலும், பிடெக் பட்டப்படிப்பில் உணவுத் தொழில்நுட்பம், கோழியினத் தொழில்நுட்பத்தில் தலா 3 மாணவர்களும், பால்வளத் தொழில்நுட்பத்தில் ஒரு மாணவரும் என 7 மாணவர்கள் சேர்க்கப்படுவர்” எனத் தெரிவித்தார். இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் 41 இடங்களும், பிடெக் படிப்பில் 4 இடங்களும் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews