SBI வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்!! இனி இதன் மூலமும் சேவையை பெறலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، يوليو 28، 2023

Comments:0

SBI வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்!! இனி இதன் மூலமும் சேவையை பெறலாம்



New Update for SBI Customers!! Now you can get the service through this too - SBI வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்!! இனி இதன் மூலமும் சேவையை பெறலாம்!!

இன்றைய காலக்கட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனை மேற்கொள்ள UPI யை பயன்படுத்துகின்றனர்.

அந்த வகையில் இவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.

தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அதிகரித்து உள்ளதால் பண பரிவர்த்தனை மேற்கொள்ள அதிக அளவில் ஆன்லைன் முறையே தேர்வு செய்கின்றனர்.

இவ்வாறு ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு SBI வங்கிகள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் தற்பொழுது SBI தனது வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய சேவை ஒன்றை தொடங்கி உள்ளது. இனி SBI வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் மூலமாகவும் சேவையை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

இதன் மூலம் பயனாளர்கள் மட்டும் சுமார் 15 க்கும் மேற்பட்ட சேவைகளை பெற்று கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது.எனவே வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது வங்கி கணக்கு இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணில் WAREG என்று மெசேஜ் செய்யவும்.

இதனை வங்கி ஆக்கவுன்ட் எண்ணுக்கு டைப் செய்து அனுப்ப வேண்டும்.இந்த மெசேஜை 7208933148 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

இந்த தகவலை SBI வங்கி உறுதி படுத்திய பின்பு உங்களுக்கு தேவையான சேவையை நீங்கள் பெற்று கொள்ளலாம். மேலும் உங்களுக்கு இது குறித்து வேறு ஏதாவது தகவல் தெரிய வேண்டும் என்றால் 9022690226 என்ற எண்ணிற்கு ஹாய் என்ற மெசேஜ் செய்து அதன் பிறகும் இதை பற்றிய தகவலை தெரிந்து கொண்டு சேவையை பெற்று கொள்ளாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة