திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நாளை 21ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 250க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொண்டு தனியார்துறையில் பல்வேறு வகையான வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே, கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.