மாற்றுத் திறனாளிகள் படிப்பதற்கு நவீன கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 19, 2023

Comments:0

மாற்றுத் திறனாளிகள் படிப்பதற்கு நவீன கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு

மாற்றுத் திறனாளிகள் படிப்பதற்கு நவீன கருவிகள் வழங்கப்படும்: திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிக்கை; திருவள்ளூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் வாயிலாக 2023 – 2024-ம் நிதியாண்டில் உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் பார்வை குறைபாடு மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் இன்டர்நெட் ரேடியோ, யூஎஸ்பி பென் டிரைவ் மற்றும் எஸ்.டி. கார்டு சேமிக்கும் வசதி, தமிழ் உட்பட மற்ற மொழிகளில் படிக்க உதவும் வசதி, நெட்வொர்க் இணைப்பு வைஃபை தவிர மொபைல் போனின் ஹாட் ஸ்பாட், உடன் இணைக்கும் வசதி, டெய்சி புத்தகங்களை பதிவேற்றம் செய்தல், மின் புத்தகங்கள் வீடியோக்கள் ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தி நேரடியாக பதிவிறக்கம் செய்தல், குரல் குறிப்புகள் மற்றும் உரை குறிப்புகளை பதிவு செய்யும் வசதி, பார்வையற்றவர்களால் பயன்படுத்த எளிதான தொட்டுணரக் கூடிய பொத்தான்கள் டாக்ஸ், டெய்சி, இ – பப், பிடிஎப், எச்டிஎம் ஆகியவற்றை எளிதாகப் படிக்கவும், பேசக்கூடிய மற்றும் தொட்டுணரக் கூடிய பொத்தான்கள் போன்ற வசதிகள் கொண்ட நவீன வாசிக்கும் கருவி வழங்கப்படவுள்ளது. எனவே இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பார்வை மாற்றுத் திறனாளிகள் பயன்பெற ஏதுவாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்கள் நகல், ஆதார் அட்டை நகல் அல்லது குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் புகைப்படம் – 3 யூடிஐடி ஸ்மார்ட் கார்டு நகல், மருத்துச் சான்றின் நகல் (படிவம் 7), கல்வி பயிலும் சான்று அசல் போன்ற ஆவணங்களுடன் நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews