தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.
வரும் புதன்கிழமை வரை விண்ணப்ப அவகாசம் இருப்பதால் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு இணையதளங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது.
இணையவழி விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் கடந்த திங்கள்கிழமையுடன் (ஜூலை 10) நிறைவடையவிருந்த நிலையில், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று வரும் 12-ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 24,127 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 11,249 பேரும் என மொத்தம் 35,376 போ் இதுவரை விண்ணப்பித்துள்ளனா்.
வரும் 12-ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியலை வெளியிடப்படவுள்ளது.
அதைத் தொடா்ந்து கலந்தாய்வைத் தொடங்க மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.