மீன்வள பல்கலை பட்டமளிப்பு விழா 14 விருதுகள் பெற்ற நாகை மாணவி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، يوليو 09، 2023

Comments:0

மீன்வள பல்கலை பட்டமளிப்பு விழா 14 விருதுகள் பெற்ற நாகை மாணவி



மீன்வள பல்கலை பட்டமளிப்பு விழா 14 விருதுகள் பெற்ற நாகை மாணவி Nagai student bagged 14 awards in Fisheries University Convocation நாகை மாவட்டத்தில் உள்ள, ஜெயலலிதா மீன்வளப் பல்கலையின் எட்டாவது பட்டமளிப்பு விழா, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலை கலையரங்கத்தில், இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது.

ஆராய்ச்சி படிப்பு முடித்த, 22 பேர், முதுநிலை படிப்பை முடித்த, 51 பேர், இளநிலை படிப்பை நிறைவு செய்த, 313 பேர் என மொத்தம், 386 பேருக்கு, கவர்னர் ரவி பட்டங்கள் வழங்கினார்.

விழாவில், மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது:

இந்தியாவில், 2.80 கோடி பேர், மீன் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம், ஆந்திராவில் இருந்து இறால் ஏற்றுமதி அதிகளவில் செய்யப்படுகிறது. கடந்த, 2014ம் ஆண்டுக்கு பின், இந்த துறை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இத்துறையில், தமிழகத்திற்கு இந்தாண்டு, 1,200 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது.

மீன்வளத் துறையில், நாடு முழுதுமான நம்முடைய ஏற்றுமதி வருவாய், 64,000 கோடி ரூபாயாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மீன்வள பல்கலை துணைவேந்தர் சுகுமார், பதிவாளர் பெலிக்ஸ் கலந்து கொண்டனர்.

*14 விருது வென்ற மாணவி.*

பட்டமளிப்பு விழாவில், ஆராய்ச்சி, முதுநிலை மற்றும் இளநிலை பட்டப் படிப்பில் சிறந்து விளங்கிய, 14 மாணவ- - மாணவியருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة