NEXT தேர்வு இந்தாண்டு முதல் அமல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، يوليو 09، 2023

Comments:0

NEXT தேர்வு இந்தாண்டு முதல் அமல்

NEXT தேர்வு இந்தாண்டு முதல் அமல் NEXT exam will be implemented from this year

*நெக்ஸ்ட் தேர்வு இந்தாண்டு முதல் அமல்.*

நடப்பு கல்வியாண்டு முதல், எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கு, தேசிய எக்ஸிட் டெஸ்ட் என்ற, 'நெக்ஸ்ட்' தேர்வு அமல்படுத்தப்படும் என, தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் நெக்ஸ்ட் நிலை 1, நெக்ஸ்ட் நிலை 2 என இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்த உள்ளது.

அதன்படி, ஐந்தரை ஆண்டுகள் கொண்ட எம்.பி.பி.எஸ்., படிப்பில், முதல் நான்கரை ஆண்டுகள் முடித்தபின், நெக்ஸ்ட் நிலை 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அப்போது தான் ஓராண்டு பயிற்சி டாக்டராக பணியாற்ற முடியும்.

பயிற்சி டாக்டராக பணியாற்றிய பின், நெக்ஸ்ட் நிலை 2 தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த தேர்வு, 2019ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., சேர்ந்த மாணவர்களுக்கு நடைமுறைக்கு வருகிறது.

இதையொட்டி, நாடு முழுதும் ஆன்லைனில் நெக்ஸ்ட் தேர்வு வரும், 28ம் தேதி ஆன்லைனில் நடைபெறும் என, தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் விபரங்களை, https://www.nmc.org.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة