தமிழ்நாடு அரசு சேவை மையத்தில் வேலை - பெண்களுக்கு முன்னுரிமை..! கடைசி தேதி - ஜூலை 10 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 03, 2023

Comments:0

தமிழ்நாடு அரசு சேவை மையத்தில் வேலை - பெண்களுக்கு முன்னுரிமை..! கடைசி தேதி - ஜூலை 10

தமிழ்நாடு அரசு சேவை மையத்தில் வேலை - பெண்களுக்கு முன்னுரிமை..! - Last Date - ஜூலை 10 Jobs in Tamil Nadu Government Service Center - Priority for women..! - Last Date - 10th July

தமிழ்நாடு அரசு சேவை மையத்தில் வேலை பெண்களுக்கு முன்னுரிமை..!

கோயம்புத்தூர்மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவி - வழக்குப் பணியாளர் (Case Worker);

சமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelor's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும்.

உளவியல் ஆலோசகர்(Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப் பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுவபம் உடையவராகவும் இருக்க வேண்டும்.

வயது 35க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15,000/ஆகும்.

பதவி: பாதுகாப்பாளர் (Security Guard)

மாத ஊதியம் ரூ.10,000/- ஆகும்.

அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.

ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

பதவி: பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)

8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6,400/- ஆகும். விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பங்கள் பூர்த்திசெய்யப்பட்ட தொடர்புடைய இணைப்புகள்/ஆவணங்களுடன் முறையாகச் சான்றொப்பமிடப்பட்டு ஜூலை 10 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் . விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி, மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பழைய கட்டிடம், தரை தளம், கோவை 641018 தொடர்பு எண் 0422-2305156 ஆகும் .

மேற்கண்ட தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் சுருக்கமாக நிராகரிக்கப்படும். விண்ணப்பத்துடன் அசல் சான்றிதழ்களை அனுப்பக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews