NTA Declares GPAT 2023 NTA Scores - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 03, 2023

Comments:0

NTA Declares GPAT 2023 NTA Scores



PRESS RELEASE

01st July, 2023

NTA Declares GPAT 2023 NTA Scores

The Graduate Pharmacy Aptitude Test (GPAT) - 2023 Examination was conducted by the National Testing Agency on 22nd May 2023. A total of 68,439 candidates registered and 62,275 candidates appeared in the examination

The scores of GPAT are being declared today at https://gpat.nta.nic.in/. The examination was conducted in 116 Cities in 221 Centres completely in CBT mode.

Live CCTV Surveillance was carried out at all centres through 4812 Cameras. 991 Jammers were installed at the examination centres to prevent unfair practice by the candidates during the examination through mobile or any other electronic device.

A total number of 235 Observers, 116 City-Coordinators, 18 Regional Coordinators & 02 National Coordinators were deployed to oversee the smooth and fair conduct of the examination in the Centre.

Gender and Category wise number of candidates registered: GPAT நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு GPAT Entrance Test Result Release - முதுநிலை பார்மசி படிப்புக்கான `ஜிபாட்' நுழைவுத் தேர்வு முடிவுகளை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.

நாட்டில் முதுநிலை பார்மசி படிப்புகளில் சேர ஜிபாட் என்ற பட்டதாரி பார்மசி தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த தேர்வு ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் கணினி வழியில் நடத்தப்படுகிறது.

அதன்படி நடப்பாண்டுக்கான ஜிபாட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 221 மையங்களில் கடந்த மே 22-ம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வெழுத 68,439 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 62,275 பட்டதாரிகள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.


இந்நிலையில் தேர்வு முடிவுகளை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. இத்தேர்வு முடிவுகளை https://gpat.nta.nic.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-69227700/ 011-4075 9000 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது gpat@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

மேலும், மதிப்பெண் பட்டியல் உட்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD GPAT 2023 NTA Scores PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews