விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச இரவு பாட சாலை திட்டம் - ஆசிரியர்களை தேர்வு செய்ய அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يوليو 12، 2023

Comments:0

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச இரவு பாட சாலை திட்டம் - ஆசிரியர்களை தேர்வு செய்ய அறிவுறுத்தல்



விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச இரவு பாட சாலை திட்டம் Free Night Patha Road Project by Vijay People's Movement காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 15ம் தேதி முதல் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச இரவு பாட சாலை திட்டம்

ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 4 இடங்களுக்கு மேல் பாட சாலை அமைக்க முடிவு

ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தல்

ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் குறுதி கொடை, விழியகம் எனப்படும் கண் தான திட்டம், விலையில்லா விருந்தகம், குழந்தைகளுக்கு பால், முட்டை, ரொட்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இரவு நேர பாடசாலையை தொடங்கும் நடிகர் விஜய்!

234 தொகுதிகளிலும் இரவு பாடசாலை திட்டத்தை நடிகர் விஜய் தொடங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காமராஜர் பிறந்த தினத்தையொட்டி ஜூலை 15 ஆம் தேதியன்று  இரவு பாடசாலையை விஜய் தொடங்குகிறார்.

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் திட்டத்தை தொடர்ந்து, இரவு பாடசாலை திட்டத்தை விஜய் தொடங்குகிறார்.

மேலும் படிப்பகம், பயிலகம், கல்வியகம், அறிவொளியகம் என்ற பெயர்களில் ஒன்றை இத்திட்டத்துக்கு வைக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலில் நுழையும் முனைப்பில் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் எனப் பெயர் மாற்றம் செய்து 234 சட்டபேரவை தொகுதிகளுக்கும் பொறுப்பாளா்களை நியமித்தார் விஜய்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة