Baseline surveyவா ?- அரசு பள்ளியின் Basementஐ ஆட்டம்காணவைக்கும் Survey வா?? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يوليو 11، 2023

Comments:0

Baseline surveyவா ?- அரசு பள்ளியின் Basementஐ ஆட்டம்காணவைக்கும் Survey வா??



*Baseline survey ஆ* *அரசு பள்ளியின் Basement ஐ ஆட்டம்* *காணவைக்கும் Survey ஆ*

பள்ளி துவங்கி ஒருமாதம் கடந்து விட்டது.

புத்தகங்கள் வழங்கப்பட்டதோடு சரி. அதனைத் தொடுவதற்கே நேரமில்லாமல் எண்ணும் எழுத்தும்

Baseline survey

7.5 Emis,

admission entry,

மூவலூர் ராமாமிர்தம் திட்டம் Entry,

Scavenger விவரம்,

தினம் தினம் இருந்தாலும் இல்லையென்றாலும் சேர்க்கை விவரம்

மாணவர் உடல்நிலை விவரம் Health screening

timetable

free issues

sports tracking

old students alumni

Oosc

Library

Smc

Noon meals

காலை உணவு

என

பல்வேறு Online entry பணிகளை ஆசிரியர்மீது திணித்து அடிப்படைக் கல்வியை ஆட்டம் காணச் செய்து கொண்டிருக்கிறது கல்வித்துறை. இதிலும் பல குளறுபடிகள்.

ஒருமுறை போட்டு முடித்து மறுபடி பார்த்தால் காணாமல் போய்விடுகிறது.

பலபள்ளிகளில் Network இருப்பதே இல்லை. ஆனால் இந்த கல்வித்துறை அதிகாரிகள் உட்கார்ந்த இடத்தில் எல்லாம் நடக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

ஒரு சிலர் இதில் கூடுதலாக அவர்களுக்கு தோன்றும் மன்றங்களின் பெயரில் Whats app group ஆரம்பித்து அதில் வேறு பல்வேறு பதிவுகளைப் போட கட்டளை.

தினம் ஒரு

Google sheet

அவர்களை யெல்லாம் நெட்வொர்க் இல்லாத இடங்களுக்கு அனுப்பி ஆசிரியர் படும் அல்லல்களை அனுபவிக்கச் செய்தாலாவது திருந்துவார்களா? அடிக்கடி பயிற்சிகள்

அளவில்லா மதிப்பீடுகள்

விரட்டும் அதிகாரிகள்

மாநில ஆய்வுகள்

எத்தனை வேகம்

எவ்வளவு துல்லியம்

அடடா சிலிர்க்கிறது

நினைக்க நினைக்க

செம்மாந்த

உங்கள்துறை

வளர்ச்சி

மேதகு

கல்விப்புலிகளே

முதலில்

புள்ளிவிவரங்களை

தூக்கி வீசுங்கள்

வந்து

பள்ளி நிலவரங்களை

அலசுங்கள்

ஒவ்வோர் ஆசிரியனும்

படும்துயர் உணருங்கள்

சொல்லிக்கொடுக்கும்

எங்களுக்கே

சொல்லிக்கொடுப்பதை

மூட்டை கட்டி விட்டு

மனிதம் சார்ந்த

கல்வியை

முன்னெடுங்கள்

பள்ளிக்கூடங்கள்

இனியேனும்

புள்ளிவிவரங்களை

சேகரிப்பதை விட்டு

அறிவு வளர்க்கும்

ஆலயங்களாகட்டும்

புள்ளிவிவரம் சேகரித்து சேகரித்து

Online இல் பதிவிட்டு அலுத்துப் போன ஆசிரியன்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة