யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، يوليو 28، 2023

Comments:0

யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு!

யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு!Application Date Notification for Yoga, Naturopathy Courses!

பி.என்.ஒய்.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை மறுநாள் (ஜூலை 30) முதல் விண்ணப்பிக்கலாம். 2023-2024-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு & அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.என்.ஒய்.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பு (5 ½ ஆண்டுகள்) சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தனித்தனியாக தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி : +2.

மேற்கண்ட பட்டப் படிப்புகளுக்கான (விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பப்படிவங்கள் ஆணையரக அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த ஆயுஷ்முறை மருத்துவக் கல்லூரிகளிலோ வழங்கப்படமாட்டாது.) மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள்., கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம். கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு 14.08.2023 மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பித்தல் / வந்து சேர வேண்டும். 30.07.2023 முதல் 14.08.2023 மாலை 5.00 மணி வரை விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினைப் பதிவிறக்கம் செய்யலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة