நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் விபரீதம்- மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، يونيو 18، 2023

Comments:0

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் விபரீதம்- மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

' நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் விபரீதம்- மாணவன் தூக்குப்போட்டு தற்கொலைTragedy- student commits suicide due to low score in NEET exam

கோட்டா பகுதியில் கடந்த 6 மாதங்களில் நீட் தேர்வில் தோல்வியடைந்து இதுவரை 12 பேர் உயிரிழப்பு. கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல். பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள கோட்டா பகுதியை சேர்ந்தவர் ரோஷன் (21). இவரது சகோதரர் சுமன். இருவரும் தனித்தனியாக வசித்து வந்த நிலையில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வந்தனர். இதில் ரோஷன் கடந்த இரண்டு வருடங்களாக நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். ரோஷன் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார்

கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கலை நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இதில், ரோஷன் 720 மதிப்பெண்ணுக்கு 400 மதிப்பெண்கள் எடுத்தார். மருத்துவம் படிக்க தேவையான மதிப்பெண்ணிற்கும் குறைவாக எடுத்ததால் ரோஷன் வருந்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், ரோஷன் அவர் தங்கியிருந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். ரோஷன் வெகு நேரமாக போன் எடுக்காததை அடுத்து, சுமன் நேரில் வந்து பார்த்துள்ளார். அப்போது, ரோஷன் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின், ரோஷனின் அறை முழுவதும் ஆய்வு செய்தனர். இதில், தற்கொலை குறிப்பு எதுவும் சிக்கிவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கோட்டா பகுதியில் கடந்த 6 மாதங்களில் நீட் தேர்வில் தோல்வியடைந்து இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة