ஆசிரியரை தாக்கிய மாணவனை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர் The police arrested the student who attacked the teacher and put him in jail
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் வாஞ்சிநாதன்(41) த/பெ துரைசாமி காமராஜபுரம், திருச்சி. என்பவர் ஊருக்கு செல்வதற்காக கிருஷ்ணா தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது மேற்படி ஆசிரியரிடம் 10 -ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர் பெரம்பலூரை சேர்ந்த ஜேம்ஸ் பாண்டி (18) த/பெ பாண்டியன், விளாமுத்தூர் ரோடு சங்குப்பேட்டை பெரம்பலூர் என்பவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என்னை ஏன் அடித்தாய் என்று கேட்டு அந்த ஆசிரியரை தாக்கி கத்தியை காட்டி மிரட்டிய குற்றத்திற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட காவல் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. பழனிச்சாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி மேற்படி எதிரியை பெரம்பலூர் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரியை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக *பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.