SMC meeting - invitation - 23.06.2023 - பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட அழைப்பு (2023-2024ஆம் கல்வியாண்டு) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، يونيو 19، 2023

Comments:0

SMC meeting - invitation - 23.06.2023 - பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட அழைப்பு (2023-2024ஆம் கல்வியாண்டு)

SMC meeting - invitation... kindly ask the Govt school HMs to take print out and ask them to send to SMC members...

பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட அழைப்பு (2023-2024ஆம் கல்வியாண்டு)

வாய்மையே வெல்லும்

தூத்துக்குடி மாவட்டம்

பள்ளியின் பெயர்:

நாள்:

குழு உறுப்பினர்களுக்கு வணக்கம்.

புதிய கல்வியாண்டு (2023-2024) தொடங்கியுள்ளது. பெரும் கனவுககோடு பள்ளிக்கு வரும் குழந்தைகளின் கனவுகளுக்கு உயிரூட்டவும், அதற்காகத் திட்டமிடவும் நம் பள்ளி மேலாண்மைக் குழுவின் முதல் கூட்டமானது வருகிற 23.06.2023 (வெள்ளிக் கிழமை) பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை தங்களின் வருகையும், சிறப்பானப் பங்களிப்பும் பாராட்டுக்குரியது. உறுப்பினர்களின் தொடர் வருகையும் சிறந்தப் பங்கேற்பும் ஈடுபாடும் பள்ளியின் வளர்ச்சி, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.

புதிய கல்வியாண்டின் முதல் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டமானது மேலே குறிப்பிட்டுள்ள தேதியில் தவறாது நடத்தப்படவுள்ளது. பல்வேறு முக்கியக் கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்துக் கலந்துபேசி நமது குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கானத் திட்டங்களை உருவாக்கி, தீர்மானங்கள் இயற்றி, பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறதிசெய்ய வேண்டியுள்ளது. எனவே, நம் பள்ளியில் பயிலும் உங்களின் செல்லக் குழந்தை வழியாகத் தங்களைக் இக்கூட்டத்தில் தவறாது பங்கேற்க அழைப்பதில் நம் பள்ளி பெருமையடைகிறது. br>
தங்களின் பங்கேற்பு மிகவும் முக்கியமானதும் அவசியமானதுமாகும். br>
இப்படிக்கு,br>
தலைமையாசிரியர்br>
பள்ளியின் முத்திரை br>
(பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட அழைப்பாளர்) br>

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة