"வீட்டுக்கொரு விஞ்ஞானி 2023" நிகழ்ச்சியில் ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதி - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் -
Admission of Interested Students to “Scientist at Home 2023” – Processes of Director of Education
புதிய தலைமுறை தொலைக்காட்சி - மனித குலத்தின் நலனுக்காக புதுமையும், எளிமையும் இணைந்த புதுப்புதுக் கருவிகளை கண்டுபிடிக்கும் புதிய விஞ்ஞானிகளையும் அவர்களது கண்டுபிடிப்புகளையும் அறிமுகப்படுத்தி கௌரவிப்பது- வீட்டுக்கொரு விஞ்ஞானி 2023 என்ற நிகழ்ச்சியில் ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்துகொள்ள தேவையான அனுமதி வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பு பார்வை:
புதிய தலைமுறை நிறுவனக் கடிதம் நாள். 2405.2023
பார்வையிற் காணும் கடிதத்திற்கிணங்க புதிய தலைமுறை என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தால், “வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2023- நிகழ்ச்சியினை வழங்கி வருவதாகவும், மனிதகுலத்தின் நலனுக்காக புதுமையும் எளிமையும் இணைந்த புதுப்புது கருவிகளைக் கண்டுபிடிக்கும் புதிய விஞ்ஞானிகளையும் அவர்களது கண்டுபிடிப்புகளையும் அறிமுகப்படுத்தி கௌரவிப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களில் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குகிற நாளைய விஞ்ஞானிகளையும் அவர்களது கண்டுபிடிப்புகளையும் உலகிற்கு அறிவிக்கின்ற உன்னத மேடை "வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2023" நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் தோறும் நடத்த இருப்பதாகவும் இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களும் பங்கேற்க உரிய அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. எனவே மேற்படி நிகழ்ச்சியில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு. அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவியர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வகையில் பங்கு பெற தேவையான ஒத்துழைப்பினை தலைமை ஆசிரியர் வாயிலாக அளித்து உதவிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.