மனைவி பெயரில் சொத்து வாங்குவது பினாமியாகாது: நீதிமன்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 12, 2023

Comments:0

மனைவி பெயரில் சொத்து வாங்குவது பினாமியாகாது: நீதிமன்றம்

மனைவி பெயரில் சொத்து வாங்குவது பினாமியாகாது: நீதிமன்றம் - Purchase of property in wife's name not fiduciary: Court

மனைவி பெயரில் சொத்துகளை வாங்குவதை பினாமி என்று சொல்ல முடியாது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்திய சமூகத்தில், மனைவி பெயரில் சொத்துகளை வாங்க, கணவர் பணம் கொடுப்பது பினாமி என்ற நடைமுறைக்கு வராது, இதனை கட்டாயம் பினாமி என்று சொல்வது சரியாக இருக்காது. சொத்து வாங்குவதற்கு செலவிட்ட பணம் வந்த முறை நிச்சயமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சொத்து யாருக்கு வாங்கப்பட்டது என்பது அல்ல என்றும் கடந்த வாரம் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பினாமி என்ற நடைமுறையில், ஒரு சொத்து யாருடையது என்பதை கணக்கில் கொள்வதுதான் முக்கியம் என்றும், இதில், தவறான வழியில் பணம் வந்துள்ளது என்பதை நிரூபிக்கவும் மகன் தவறிவிட்டதாகக் கூறி, தந்தை, தாயின் பெயரில் வாங்கிய சொத்துகள் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

தந்தை, தாயின் பெயரில் வாங்கிய வீட்டில் மகன் 2011ஆம் ஆண்டு வரை வசித்து வந்துள்ளார். அங்கிருந்து வெளியேறிய பிறகு, வீடு அவருக்கும், தாய் மற்றும் சகோதரிக்கும் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் தாயும், சகோதரியும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மகன் மீதான அதிருப்தியில், தாய் இறப்பதற்கு முன்பு, 2019ஆம் ஆண்டு, சொத்தை மகள் பெயருக்கு மாற்றிவிட்டார்.

இந்த நிலையில்தான் இது பினாமி சொத்து என்று கூறி மகன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அது தள்ளுபடியாகியிருக்கிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews