இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் - (என்.ஐ.ஆர்.எப்) நிறுவனம் வெளியீடு - Ranking List of Higher Education Institutions in India - Published by (NIRF).
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய தரவரிசைக் கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்) நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சுமார் 3000 கல்லூரிகளுக்கு மேலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஐந்து முக்கிய கூறுகளை கொண்டு தரவரிசை வழங்கப்பட்டுள்ளன.
அதாவது, கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள் (40%), பட்டப்படிப்பு முடிவுகள் (25%), ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை நடைமுறைகள் (15%), கற்றல் சென்று சேரும் திறன் (10%) மற்றும் அறிவுத்திறன் (10%) ஆகிய 5 கூறுகளை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் முதல் 100 இடங்களில் தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
ஒட்டுமொத்த தரவரிசையில் 100ல் தமிழகத்தின் 18 கல்வி நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.
அதில் சென்னை ஐ.ஐ.டி முதலிடத்தை பிடித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் தமிழகத்தின் 22 பல்கலை.,கள் இடம்பெற்றுள்ளன.
100 சிறந்த கல்லூரிகளில், தமிழகத்தில் இருந்து 35 கல்லூரிகளும், டில்லியில் இருந்து 32 கல்லூரிகளும், கேரளாவில் இருந்து 14 கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன.
மற்ற மாநிலங்கள் அனைத்தையும் சேர்த்து 19 கல்லூரிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.