மதுரை எய்ம்ஸ்: பதிவாளர், தேர்வு அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - Madurai AIIMS: Applications are invited for the posts of Registrar, Examination Officer
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உள் ளிட்ட 7 பணியிடங்களுக்கு விண் ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. அதற்கான கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகள் குறித்த விவரங்கள் இணை யத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம், தோப்பூ ரில் ரூ.1,900 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. எய்ம்ஸ் கல்லூரியில் 50 எம்பிபிஎஸ் ங்களில் சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த இரு ஆண் டுகளாக ராமநாதபுரம் அரசு மருத் துவக்கல்லூரியில் வகுப்புகள் நடை பெற்று வருகின்றன.
மருத்துவப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக் கான பணியிடங்கள், துறை சார்ந்து நிரப்பப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது பதிவா ளர், உதவி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, கணக்கு அலுவலர், உதவி நிர்வாக அலுவலர், செயல் உதவியா ளர், தனி உதவியாளர், உயர் நிலை எழுத்தர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளி யிடப்பட்டுள்ளது.
அவர்களுக்கானதகுதிகள் ஊதிய விவரங்கள் https://jipmer.edu.in என்ற இணையப் பக்கத்தில் வெளி யிடப்பட்டுள்ளன. விண்ணப் பங்களை ஜூலை 24-ஆம் தேதிக் குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி யின் செயல் இயக்குநர் அறிவித்துள்ளார்

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.