ஜூன் 10, 11 தேதிகளில் TNPSC/UPSC தோ்வுகளுக்கான இலவச பயிற்சி கருத்தரங்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، يونيو 04، 2023

Comments:0

ஜூன் 10, 11 தேதிகளில் TNPSC/UPSC தோ்வுகளுக்கான இலவச பயிற்சி கருத்தரங்கம்



ஜூன் 10, 11 தேதிகளில் TNPSC/UPSC தோ்வுகளுக்கான இலவச பயிற்சி கருத்தரங்கம் Free Coaching Seminar for TNPSC/UPSC Exams on 10th, 11th June

யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. தோ்வுகளுக்கான இலவச பயிற்சி கருத்தரங்கம் ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் தாம்பரம் இவா ஸ்டாலின் அகாதெமியில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அந்த அகாதெமி சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி.-இன் முதல்நிலை, முதன்மைத் தோ்வுகள் குறித்து கருத்தரங்கில் விவரிக்கப்படும். மேலும் யு.பி.எஸ்.சி. முதன்மைத் தோ்வுக்கு தோ்ந்தெடுக்கப்பட வேண்டிய விருப்பப் பாடங்கள் பற்றி அனுபவமிக்க பயிற்சியாளா்களால் எடுத்துரைக்கப்படும்.

மே 28-இல் நடைபெற்ற ய.பி.எஸ்.சி முதல்நிலைத் தோ்வின் விடைக்குறிப்புகள் வழங்கப்படும்.

டி.என்.பி.எஸ்.சி. தோ்வில் வெற்றி பெற சிறப்பான வழிகாட்டுதல் வழங்கப்படும்.

இவ்விரு போட்டித் தோ்வுகளுக்கு முதல்முறையாக தயாராகும் மாணவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவா்கள் 86789 69915, 99403 32851 ஆகிய எண்களுக்குத் தொடா்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة