மாற்றுத் திறனாளிகளிடம் கட்டணம் வசூல்: உயர் கல்வித் துறை எச்சரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 08, 2023

Comments:0

மாற்றுத் திறனாளிகளிடம் கட்டணம் வசூல்: உயர் கல்வித் துறை எச்சரிக்கை



Fee collection from differently abled: Higher education department warns - மாற்றுத் திறனாளிகளிடம் கட்டணம் வசூல்: உயர் கல்வித் துறை எச்சரிக்கை

சென்னை, ஜூன் 7: அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளிடம் கல்விக் கட்டணம் வசூ லிக்கக் கூடாது என பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தவறாமல் பின் பற்ற வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வித் துறை சார்பில் அனைத்து மண்டல கல்லூ ரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை யில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூ ரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்விக் கட்டணம், தனிக் கட்டணம் (ஸ்பெஷல் ஃபீஸ்) செலுத்துவதில் இருந்து விலக்க ளித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளிடமிருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.

எனவே இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை தவறாமல் பின்பற்றுமாறும், அவ்வாறு பின்பற்றாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல் லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews