உதவி தலைமையாசிரியரின் பணிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 15, 2023

Comments:0

உதவி தலைமையாசிரியரின் பணிகள்

உதவி தலைமையாசிரியரின் பணிகள்

1. கல்வி போதனை சம்பந்தப்பட்ட வேலைகளை மேல்நிலை வகுப்புகளை பொறுத்த மட்டில் முதுகலைப் பட்டதாரி உதவி தலைமையாசிரியரும், உயர்நிலைப் பள்ளி வகுப்புகளை பொறுத்த மட்டில் 9-10 வகுப்புக்கான உதவித் தலைமையாசிரியரும், 6-8 வகுப்புக்கான உதவித் தலைமையாசிரியரும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

2. இம்மூன்று உதவித் தலைமையாசிரியரும் தங்களது ஒத்துழைப்பினை தலைமையாசிரியருக்கு அளித்து பள்ளி முன்னேற்றத்தினை கருத்தில் கொண்டு தலைமை ஆசிரியருக்கு உதவியாக செயல்பட வேண்டும்.


3. தலைமையாசிரியர் சிறு விடுப்பு, குறுகிய கால விடுப்பு, வேறு பணி, பணியிடை பயிற்சி போன்ற காரணங்களுக்காக பணியில் இல்லாத நேரங்களில் பொறுப்பு தலைமையாசிரியராக (முதுகலையாசிரியர் நிலையில் உள்ளவர்) உள்ள உதவித் தலைமையாசிரியர் செயல்பட வேண்டும்.

4. தலைமையாசிரியர் மாறுதலில் / பதவி உயர்வில் செல்லும் போதும் மூத்த முதுகலையாசிரியராக உள்ளவர் (மேல்நிலைப் பள்ளி பொருத்த மட்டில்) பொறுப்பு தலைமையாசிரியராக செயல்பட வேண்டும். உயர்நிலைப் பள்ளியை பொறுத்த மட்டில் பள்ளி உதவியாசிரியர் / தமிழாசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 2 மற்றும் அவர்தம் நிலையில் உள்ளோர் உதவி தலைமை ஆசிரியராக உள்ளவர் பொறுப்பு தலைமையாசிரியராக செயல்படவேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews