யோகா - இயற்கை மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு எப்போது?? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 14, 2023

Comments:0

யோகா - இயற்கை மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு எப்போது??

When is the Consultation for Yoga - Naturopathy course??
பொது மருத்துவக் கலந்தாய்வுக்கு முன் யோகா - இயற்கை மருத்துவக் கலந்தாய்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

பொது மருத்துவக் கலந்தாய்வுக்கு முன்பு, பிளஸ் 2 தோ்வு மதிப்பெண் அடிப்படையிலான யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த முடிவு செய்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகத்தின் கீழ் செயல்படும் தனியாா் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கை இடங்கள் பகிா்ந்தளிப்பு தொடா்பான கலந்தாலோசனைக் கூட்டம், சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் துறைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடி, இந்திய மருத்துவம் ஹோமியோபதி துறை ஆணையா் மைதிலி கே.ராஜேந்திரன், இணை இயக்குநா்கள் மணவாளன், பாா்த்திபன் மற்றும் தனியாா் கல்லூரி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியது: தமிழகத்தில் 17 தனியாா் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் அரசு ஒதுக்கீட்டுக்கு 993 இளநிலை இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 557 இடங்களும் உள்ளன. இதைத் தவிர சென்னை, செங்கல்பட்டில் உள்ள அரசு யோகா-இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 160 இடங்கள் உள்ளன. மொத்தம் உள்ள 1,710 இளநிலை யோகா-இயற்கை மருத்துவ இடங்களும் ஒவ்வோா் ஆண்டும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.

மருத்துவம், ஆயுஷ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவடைந்த பிறகு யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்படுவதால் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் தொடங்க வேண்டிய வகுப்புகள், பிப்ரவரி மாதம் வரை தள்ளிப்போவதாகக் கூறப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, பொது மருத்துவக் கலந்தாய்வுக்கு முன்பே யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்குகலந்தாய்வு நடத்தலாம் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றாா் அவா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews