சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: செப்.15-ல் முதன்மை தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يونيو 13، 2023

Comments:0

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: செப்.15-ல் முதன்மை தேர்வு

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: செப்.15-ல் முதன்மை தேர்வு - Civil Service Main Exam Result Release: Main Exam on Sep 15

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில்சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 14,624 பேர் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 700-க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஏஏஎஸ் உட்பட மத்திய அரசின் 24 வகையான உயர்பணிகளுக்கு நேரடியாக ஆட்களை தேர்வு செய்ய சிவில் சர்வீஸ் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் இத்தேர்வை நடத்துகிறது. இது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு என 3 நிலைகளை உள்ளடக்கியது.

இந்நிலையில், இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணிகளில் 1,105காலியிடங்களை நிரப்பும் வகையில், முதல்கட்ட தேர்வான முதல்நிலைத் தேர்வு மே 28-ம் தேதிஇந்தியா முழுவதும் 73 நகரங்களில்நடைபெற்றது. இத்தேர்வை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 நகரங்களில் நடந்த முதல்நிலைத் தேர்வை 50 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் எழுதினர். 14,624 பேர் தேர்ச்சி: விடைத்தாள் மதிப்பீடு முடிவடைந்த நிலையில் முதல்நிலைத் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி நேற்று பிற்பகல் இணையதளத்தில் (wwww.upsc.gov.in) வெளியிட்டது. இத்தேர்வில் 14,624 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வானவர் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவர்கள் முதன்மைத் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். முதல்நிலைத் தேர்வில் தமிழக மாணவர்கள் 700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

செப்.15-ல் முதன்மை தேர்வு: இதற்கிடையே, முதன்மைத் தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. முதல்நிலைத் தேர்வில்தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதுதொடர்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة