பள்ளி வளாகத்திற்குள் புகுந்து கொடூரத் தாக்குதல்.. 38 மாணவர்கள் உயிரிழப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، يونيو 17، 2023

Comments:0

பள்ளி வளாகத்திற்குள் புகுந்து கொடூரத் தாக்குதல்.. 38 மாணவர்கள் உயிரிழப்பு



பள்ளி வளாகத்திற்குள் புகுந்து போராளி குழு கொடூரத் தாக்குதல்.. 38 மாணவர்கள் உயிரிழப்பு - Brutal attack inside the school premises.. 38 students lost their lives

உகாண்டாவில் பள்ளி ஒன்றின் வளாகத்திற்குள் புகுந்து போராளி குழுவினர் நடத்திய தாக்குதலில் 38 மாணவர்கள் உயிரிழந்தனர்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ள ஏ.டி.எஃப். அமைப்பினர் அண்டை நாடான காங்கோவில் பதுங்கியபடி உகாண்டாவில் அவ்வப்போது தாக்குதல் நிடத்திவருகின்றனர்.

இந்நிலையில் காங்கோ எல்லையை ஒட்டி அமைந்துள்ள கஸஸே மாவட்டத்திலுள்ள உயர்நிலை பள்ளிக்குள் புகுந்த ஏ.டி.எஃப். போராளிகள் துப்பாக்கியால் சுட்டும், பட்டா கத்தியால் வெட்டியும் கண்மூடித்தனமாகத் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் மாணவர்கள் 38 பேரும், பொதுமக்கள் 3 பேரும் உயிரிழந்தனர்.

மாணவர் விடுதிக்கு தீ வைத்த போராளி குழுவினர், ஏராளமான மாணவர்களை அங்கிருந்து கடத்திச் சென்றனர். தற்போது அவர்கள் காங்கோ நாட்டின் Virunga உயிரியல் பூங்காவில் பதுங்கியுள்ளதாக உகாண்டா ராணுவம் தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة