'லஞ்சம் கொடுத்தால்தான் பணப்பலன் கிடைக்கும்’ - ஓய்வூதிய ஆசிரியர்கள் அலைக்கழிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، يونيو 24، 2023

Comments:0

'லஞ்சம் கொடுத்தால்தான் பணப்பலன் கிடைக்கும்’ - ஓய்வூதிய ஆசிரியர்கள் அலைக்கழிப்பு



'லஞ்சம் கொடுத்தால்தான் பணப்பலன் கிடைக்கும்’ - ஓய்வூதிய ஆசிரியர்கள் அலைக்கழிப்பு 'Bribery is the only way to get money' - Retired teachers protest

அரக்கோணத்தில் ஓய்வூதிய ஆசிரியர்கள் பணப்பலன் பெறுவதற்கு வட்டார கல்வி மற்றும் சார் கருவூல அலுவலக பணியாளர்கள் அலைக் கழிக்கப்படுகிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. kaninikkalvi.blogspot.com

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகாவுக்கு உட்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு சேர வேண்டிய பண பலன்களான கமுட்டேஷன், கிராஜுவிட்டி, பி.எப்., ஈட்டிய விடுப்பு, ஸ்பெஷல் பேமிலி பண்ட் ஆகிய பணப் பலன்கள் பெறுவதற்கு வட்டார கல்வி அலுவலகத்திற்கும், சார் கருவூலத்திற்கும் நடையாய்நடந்து வருகின்றனர். வட்டார கல்வி அலுவலகம், சார் கருவூல அலுவலக பணியாளர்கள் இணைந்து ஓய்வூதியதாரர்களிடம்லஞ்சம் எதிர்பார்த்து அவர்களுக்கு பணப்பலன்களை விரைந்து வழங்காமல் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து ஓய்வூதிய ஆசிரியர்கள் கூறுகையில், எங்களுக்கு ரூ.20 முதல் 50 லட்சம் வரை ஓய்வூதியம் கிடைக்கும். இந்த பணத்தை வைத்துதான் மருத்துவ செலவு, மகள், மகன் திருமண செலவு உள்ளிட்ட செலவுகளை பார்க்க வேண்டி உள்ளது.எங்களின் பணத்தை பெறுவதற்கு அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. சுமார் ரூ.1 லட்சம் வாங்குவதற்கு குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் கேட்கிறார்கள். kaninikkalvi.blogspot.com

வட்டி வசூலிப்பது போன்று நாங்கள் பெரும் ஓய்வூதிய பலனுக்கு ஏற்ப லஞ்சம் கேட்கின்றனர். அப்படியே லஞ்சம் கொடுத்தாலும் விரைவில் வேலையும் நடப்பதில்லை. மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு எங்களின் பிரச்சினைக்கு தகுந்த தீர்வு காண வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة