கோவை பாரதியார் பல்கலை.யில் எம்.பில்., பிஎச்.டி. படிப்புக்கு விண்ணப்பிக்க 30-ம் தேதி கடைசி நாள் - Bharathiar University M.Phil., Ph.D. 30th is the last day to apply for the course
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில்., பிஎச்.டி. படிப்புக்கு வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாரதியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகள், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பிஎச்.டி., (பகுதி நேரம், முழு நேரம்), எம்.பில். மாணவர் சேர்க்கை https://b-u.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக வரும் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்க எம்.பில். படிப்புக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.750, பிஎச்.டி. படிப்புக்கு ரூ.1,000 கட்டணமாக இணைய வழியாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் எம்.பில். படிப்புக்கு கட்டணமாக ரூ.375, பிஎச்.டி. படிப்புக்கு ரூ.500-ஐ சாதி சான்றிதழுடன் இணைய வழியாக செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ‘பதிவாளர், பாரதியார் பல்கலைக்கழகம்-கோவை-641046’ என்ற முகவரிக்கு வரும் 30-ம் தேதி (மாலை 5 மணி வரை) அனுப்பலாம். கடைசி தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்களும், உரிய கட்டணமின்றி பெறப்படும் விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படாது. ஜூலை 2023 எம்.பில். (பகுதி நேரம், முழு நேரம்) படிப்புக்கான சேர்க்கையானது, ஜூன் 2023 ‘செட்’ பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் நடைபெறும்.
ஜூலை 2023 பிஎச்.டி (பகுதி நேரம், முழு நேரம்) ஆராய்ச்சி படிப்புக்கான சேர்க்கையானது, ஆகஸ்ட் 2022 பொது நுழைவுத் தேர்வு அடிப்படையிலும், ஜூன் 2023 பொது நுழைவுத் தேர்வு அடிப்படையிலும், நேர்காணல் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக சட்ட விதிமுறைகளின் அடிப்படையிலும் நடைபெறும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://b-u.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.