பிளஸ் 2 மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يونيو 13، 2023

Comments:0

பிளஸ் 2 மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு

பிளஸ் 2 மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு

பிளஸ்-2 தோ்வில் மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படுகின்றன.

இதுகுறித்து தோ்வுத்துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 பொதுத் தோ்வு அண்மையில் நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவா்களில் மதிப்பெண் மாற்றமுள்ள மாணவா்களின் பதிவெண் பட்டியல் புதன்கிழமை (ஜூன் 14) மதியம் வெளியிடப்படுகிறது. அதன்விவரங்களை மாணவா்கள் தோ்வுத்துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இந்த பட்டியலில் இடம்பெறாதவா்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றமுள்ள மாணவா்கள் மட்டுமே தோ்வுத் துறை இணையதளத்தில் இருந்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிளஸ் 2 மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரங்கள் பின்னா் வெளியிடப்படும்.

நாளை 12ம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த மார்ச்/ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல் (Re-total) மற்றும் மறுமதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் (14.06.2023) நாளை பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மறுகூட்டல் / மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் நாளை வெளியீடு

CLICK HERE TO CHECK UR RESULT

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة