ஒரே நாளில் 11,801 அரசு ஊழியர்கள் ஓய்வு: ரூ.1500 கோடி பணபலன் கொடுப்பதில் சிக்கல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يونيو 01، 2023

Comments:0

ஒரே நாளில் 11,801 அரசு ஊழியர்கள் ஓய்வு: ரூ.1500 கோடி பணபலன் கொடுப்பதில் சிக்கல்

ஒரே நாளில் 11,801 அரசு ஊழியர்கள் ஓய்வு: ரூ.1500 கோடி பணபலன் கொடுப்பதில் சிக்கல் - 11,801 govt employees retired in one day: Rs 1500 crore problem in payment of benefits


கேரளாவில் ஒரே நாளில் 11,801 அரசு ஊழியர்கள் ஓய்வு: ரூ.1500 கோடி பணபலன் கொடுப்பதில் சிக்கல்

கேரள அரசுப் பணியில் இருந்து நேற்று ஒரே நாளில் 11,801 ஊழியர்கள் ஓய்வு பெற்றனர்.

அவர்களுக்கு பண பலனாக ரூ.1500 கோடிக்கு மேல் கொடுக்க வேண்டும் என்பதால் ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அரசுக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கேரள அரசுப் பணியில் இருந்து நேற்று ஒரே நாளில் 11,801 ஊழியர்கள் ஓய்வு பெற்றனர்.

சுகாதாரம், கல்வி, வருவாய் ஆகிய துறைகளில் இருந்து தான் பெருமளவு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இவ்வாறு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பண பலன்களாக கொடுக்க வேண்டிய தொகை ரூ.1500 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஊழியருக்கும் குறைந்தது ரூ.15 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை கொடுக்க வேண்டும்.

ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் கேரள அரசால் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு உரிய பணப் பலன்களை கொடுக்க முடியுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் ஊழியர்களுக்கான பண பலன்களை கொடுப்பதற்கு எந்த சிக்கலும் இல்லை என்றும், யாருக்கும் கொடுக்க வேண்டிய பணத்தை நிறுத்தி வைக்க மாட்டோம் என்றும் கேரள நிதித்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة