ஜூன் 1-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு ஆட்கள் தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، مايو 17، 2023

Comments:0

ஜூன் 1-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு ஆட்கள் தேர்வு

ஜூன் 1-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - You can apply online from 1st June Recruitment for the post of Sub-Inspector

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு ஆட்கள் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை, மே.6- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 6 பின்னடைவு பணியிடங்கள் உள்பட 621போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை)பணியிடங்களுக்கு நேரடித்தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தின் மூலம் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

ஆகஸ்டு மாதம் எழுத்து தேர்வை நடத்துவதற்கு தேர்வு வாரியம் திட்டமிடப்பட்டு உள்ளது. மொத்தம் உள்ள காலிப்ப ணியிடங்களில் 20 சதவீதம் போலீஸ் துறையினருக்கு ஒதுக் கப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படும். தேர்வு தொடர்பான மேலும் தகவலை https://www.tnusrb.tn.gov.in/என்ற தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என்று அந்த வாரியம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة