வேலையுடன் படிப்பு: 'தாட்கோ' அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، مايو 23، 2023

Comments:0

வேலையுடன் படிப்பு: 'தாட்கோ' அழைப்பு

வேலையுடன் படிப்பு: 'தாட்கோ' அழைப்பு

பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு, எச்.சி.எல்., நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன், பட்டப் படிப்பு படிக்க வழிவகை செய்யப்பட உள்ளது.

இதன்படி ராஜஸ்தான் மாநிலம், பிட்ஸ்பிலானி கல்லுாரியில், பி.எஸ்சி., கணினி வடிவமைப்பு, தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம், சாஸ்த்ரா பல்கலையில், பி.சி.ஏ., படிக்கலாம்.

அமிட்டி பல்கலையில், பி.சி.ஏ., - பி.பி.ஏ., - பி.காம்., மற்றும் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஐ.ஐ.எம்., பல்கலையில், 'இன்டகரேட்டடு மேனேஜ்மென்ட்' ஆகிய பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்க வாய்ப்பு பெற்றுத் தரப்படும்.

இந்த படிப்புகளில் சேர, எச்.சி.எல்., நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினம் சார்ந்த இளைஞர்களுக்கு, 'தாட்கோ' திறன் அடிப்படையில், பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போது சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில், பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதில் வார்டு பாய், உதவி சமையல்காரர், வீட்டு வேலை செய்பவர், உதவி குழாய் பழுது பார்ப்பவர், வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி, ஆயுதமற்ற பாதுகாப்பு காவலர், இலகு ரக மோட்டார் வாகன ஓட்டுனர், நான்கு சக்கர வாகன சேவை உதவியாளர் மற்றும் வீட்டுக் காப்பாளர் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இதற்கு, 18 முதல் 45 வயது வரையிலானோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலம், 10 முதல் 14 நாட்கள். இந்த பயிற்சியை பெற்றவர்களுக்கு, பிரபல மருத்துவமனைகள், ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதற்கு 'தாட்கோ' மூலம் உதவித்தொகையாக, பயிற்சி நாட்களில் 375 ரூபாய் வழங்கப்படும். மேற்கண்ட பட்டப்படிப்பு, திறன் பயிற்சிக்கு, தாட்கோ இணையதளத்தில், www.tahdco.com முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்கான மொத்த செலவையும், தாட்கோ வழங்கும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة