அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் ஆர்வம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 03, 2023

1 Comments

அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் ஆர்வம்

அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் ஆர்வம்

60 ஆயிரம் விண்ணப்பங்கள் பெற்றிருப்பதாக தகவல் சென்னை, மே.3-

அரசு பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இருந்து மாணவர்சேர்க்கைதொடங்கப்படும்.

அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை கடந்தமாதம் (ஏப்ரல்) 17-ந்தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்.

அதைத் தொடர்ந்து அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை |பணிகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன.

அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகு |திகளுக்குச்சென்று, அரசு பள்ளிகளில் சேர்ப்பதால் மாணவ- மாணவிகளுக்கு கிடைக்கக்கூடிய அரசின் திட்டங்கள், சலு கைகள் ஆகியவற்றை எடுத்துக்கூறி விழிப்புணர்வு மேற்கொள் ளவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, ஆசிரியர்களும் வீடு |வீடாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர். இதன் காரணமாக அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு சேர்க் | கைக்கு பெற்றோர் பலர் ஆர்வம் காட்டுவதாகவும், இதுவரை 60 ஆயிரம் விண்ணப்பங்களை அதற்காக பள்ளிகளில்இருந்து |பெற்று சென்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி பார்க்கும்போது நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews