ICSE 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 15, 2023

Comments:0

ICSE 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

ICSE 10th, 12th Result Release - ICSE 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு ஐசிஎஸ்இ வாரியத்தின் 10-ம்வகுப்பு தேர்வு கடந்த பிப்.27 முதல்மார்ச் 29-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை நாடு முழுவதும் 2.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

அதேபோல, 12-ம்வகுப்பு தேர்வு பிப்.13-ம் தொடங்கிமார்ச் 31-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை 98,505 மாணவ, மாணவிகள் எழுதினர்.

இந்நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வில் 98.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், மாணவிகள் 99.2 சதவீதம் பேரும், மாணவர்கள் 98.71 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

9 பேர் 99.8 சதவீத மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்துள்ளனர்.

12-ம் வகுப்பு தேர்வில் 96.93சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், மாணவிகள் 98.01 சதவீதம் பேரும், மாணவர்கள் 95.96 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 99.75 சதவீத மதிப்பெண் பெற்று 5 பேர் முதல் இடம் பிடித்துள்ளனர்.

தேர்வு முடிவுகளை cisce.org மற்றும் results.cisce.org ஆகிய இணையதளங்களில் அறியலாம் என ஐசிஎஸ்இ வாரியம் தெரிவித்துள்ளது. ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.

இந்திய பள்ளி சான்றிதழ் படிப்பு கவுன்சிலான, ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், பிப்ரவரி முதல் மார்ச் வரை நடந்தன.

இதன் முடிவு கள், நேற்று மாலை வெளியிடப்பட்டன.

பிளஸ் 2வில், 98 ஆயிரம் பேரும்; 10ம் வகுப்பில், 2.37 லட்சம் பேரும் பங்கேற்றனர். அவர்களில், 10ம் வகுப்பில், 98.94 சதவீதம்; பிளஸ் 2வில், 96.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.

பிளஸ் 2வில் மாணவியர், 98.01 சதவீதம்; மாணவர்கள், 95.96 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பில், மாணவியர் 99.21 சதவீதமும்; மாணவர்கள், 98.71 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2வில், மூன்று மாணவியர் உட்பட, ஐந்து பேர் முதலிடம் பெற்றுள்ளனர். 10ம் வகுப்பில், மூன்று மாணவியர் உட்பட, ஒன்பது மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளதாக ஐ.சி.எஸ்.இ., கவுன்சில் அறிவித்துஉள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews