அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை - செய்தி வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 05, 2023

Comments:0

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை - செய்தி வெளியீடு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு.

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு பட்டப்படிப்புகளுக்கு வரும் 8ம் தேதியில் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மே மாதம் 19ம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை தொடர்பான - செய்தி வெளியீடு

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2023–2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டண விவரம்

(ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும்) விண்ணப்பக் கட்டணம் - ரூ.48/- பதிவுக் கட்டணம் - ரூ.2/-

SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை பதிவுக் கட்டணம் ரூ.2/- மட்டும்

விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/ CreditCard Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai -15" என்ற பெயரில் 08/05/2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கும் நாள் - 08.05.2023

இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் - 19.05.2023

தொடர்பு எண்: 1800 425 0110

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews