10ம் வகுப்பு விடைத்தாள் மாயம் - மாணவர் வாழ்க்கையில் விளையாடும் ஆசிரியர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، مايو 01، 2023

1 Comments

10ம் வகுப்பு விடைத்தாள் மாயம் - மாணவர் வாழ்க்கையில் விளையாடும் ஆசிரியர்கள்

10ம் வகுப்பு விடைத்தாள் மாயம் மாணவர் வாழ்க்கையில் விளையாடும் ஆசிரியர்கள் -

ஆசிரியர்களுக்கு இடையேயான காழ்ப்புணர்ச்சியால் பத்தாம் வகுப்பு விடைத்தாள் மாயமாகியதாக கூறப்படுகிறது.

அரக்கோணம் திருத்தணி ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் விடைத் தாள் திருத்தும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் அந்தந்த பிரிவு பாட ஆசிரியர்கள் தினந்தோறும் விடைத்தாள்களை திருத்தம் செய்து வருகின்றனர். இந்நிலையில் 2 தினங் களுக்கு முன்பு சமூக அறிவியல் பாடத்தின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது.

அப்போது ஒரு விடைத்தாள் மாயமானதாக ஆசிரியர்கள் மத்தி பேசப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் விடைத்தாள் திருத்தும் பணி நடை பெறும் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் அங்கிருந்தவர்க ளிடம் கேட்ட போது விடைத்தாள் திருத்தும் ஒரு சில ஆசிரியர்கள் மத்தியில் உள்ள காழ்ப்புணர்ச்சியால் மாணவனின் விடைத்தாள் எடுத்து மறைத்து வைத்ததாகவும் கூறப்படு கிறது.

மாயமான விடைத்தாளை கழிவறையில் கண்டெடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. கோணம் பகுதியில் காட்டுத்தீயாக பரவியதால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் மாணவனின் வாழ்க்கை யோடு விளையாடியவர் யார் என மாவட்ட நிர்வாகம் விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும். தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகின்றனர்

هناك تعليق واحد:

  1. ஆசிரியர்களா இவர்கள் idiots

    ردحذف

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة