CPS ஒழிப்பு இயக்கம் - 1.05.2023 இன்று மாநில ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 01, 2023

Comments:0

CPS ஒழிப்பு இயக்கம் - 1.05.2023 இன்று மாநில ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்



CPS ஒழிப்பு இயக்கம் - 1.05.2023 இன்று மாநில ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

*CPS ஒழிப்பு இயக்கம்* *மாநில மையம்*

*01.05.2023 இன்று மதுரையில் மாநில ஆலோசனைக் கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் சு. ஜெயராஜராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.*

*நடைபெற்ற வேலைகள், பரிசீலனை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய முன்மொழிவுகளை மாநில ஒருங்கிணைப்பாளர் பி.பிரெடெரிக் எங்கெல்ஸ் முன்மொழிந்தார்.*

*TNGEA மேனாள் மாநிலத் தலைவர் M. சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.*

*கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது:*

1) 👍 *CPS திட்டத்தில் பணிபுரிந்து இறந்த குடும்பத்தினர் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை 19.05.2023 (வெள்ளிக் கிழமை) அன்று திருச்சியில் நடத்துவது என்றும்,*

👍 *உண்ணாவிரதத்தில் பங்கேற்கும் குடும்பத்தினரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அழைத்து வரவேண்டும் என்றும்,*

👍 *உண்ணாவிரதத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,இணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்டத்திற்கு ஒருவர் பங்கேற்க வேண்டும் என்றும்* 👍 *உண்ணாவிரதத்திற்கு* *30000 துண்டு பிரசுரம் 2000 சுவரொட்டி அச்சடிப்பது என்றும்,*

👍 *உண்ணாவிரதப் போராட்ட பங்கீடாக மாவட்டத்திற்கு Rs.5000 வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.*

👍 *3.5.23 முதல் 9.5.23 க்குள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.* .

2) 👍 *27.6.23 அன்று நடைபெறவுள்ள தற்செயல் விடுப்பு போராட்டத்தில் பங்கேற்க* *அனைத்து பொது சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் ஆசிரியர்கள் சங்கங்களின் மாநிலத் தலைவர் / பொதுச் செயலாளர்களை 22.5.23 முதல் 4.6.23வரை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு கடிதம் அளிப்பது என்றும்*

👍 *3.5.23 முதல் 24.6.23 வரை சனி, ஞாயிறுகளில் மாவட்ட அளவில் போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது என்றும்,*

👍 *5.6.23 முதல் 23.6.23 வரை 3 குழுக்களாக மாநிலம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடத்துவது என்றும்,*

👍 *பிரச்சார இயக்கத்திற்கு ஒரு லட்சம் துண்டு பிரசுரம், 10000 சுவரொட்டி அச்சடிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.*

*மாநில ஒருங்கிணைப்பாளர்கள்*

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews