வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு 10.05.2023 அன்று நடைபெறுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 05, 2023

Comments:0

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு 10.05.2023 அன்று நடைபெறுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு 10.05.2023 அன்று நடைபெறுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

தொடக்கக் கல்வி - சார்நிலைப்பணி -வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் - பதவி உயர்வு மூலம் நியமனம் - 01.01.2023 - நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவகர் பதவி உயர்வுக்கு 31.12.2010 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் இறுதி தகுதிவாய்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டது - பதவி உயர்வு கலந்தாய்வு - தொடர்பாக..!

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள்:03.04.2023

ந.க.எண்.07346/1/2023,

2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து (தொடக்கக் கல்வி) பெறப்பட்ட கடிதம்

3. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நக.எண்.07346/ஐ1/2023. நாள்: 03:05.2023

4. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.07346/ஐ1/2023-1, நாள்:05-05-2023

பார்வை 4 இல் கண்டுள்ள செயல்முறைகளில் வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த 345 நபர்களை கொண்ட இறுதி தருதிவாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு EMS இணையதளம் மூலம் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் (தொடக்கக் கல்வி) 10.05.2023 அன்று காலை 10:00 மணியளவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இறுதி தகுதிவாய்ந்தோர் பட்டியலில் உள்ள நபர்களை இக்கலந்தாய்வில் தவறாமல் கலந்துக்கொள்ள அறிவுறுத்துமாறும், கலந்தாய்வு நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews