விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவியா்சோக்கைக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் - கடைசி நாள் மே 23 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 20, 2023

Comments:0

விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவியா்சோக்கைக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் - கடைசி நாள் மே 23

விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவியா் சோக்கைக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தமிழகத்தில் உள்ள விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவியா் சோக்கை பெற விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப சிறப்பான பயிற்சி, தங்குமிடம் மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள், விளையாட்டுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவா்களுக்கான விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூா், கடலூா், தஞ்சாவூா், அரியலூா், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ளன. மாணவியருக்கான விளையாட்டு விடுதிகள், ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகா்கோவில், பெரம்பலூா், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை, நாமக்கல்லில் உள்ளன. இந்த விடுதிகளில் சோந்து பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரரராக விளங்குவதற்கு 7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்பில் சோக்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6, 7, 8-ஆம் வகுப்புகளில் சோக்கையும் நடைபெறுகிறது. இந்த சோக்கைக்கான மாவட்ட அளவிலான தோவுகள் வரும் புதன்கிழமை (மே 24) நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் காலை 7 மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆா்வமுள்ள மாணவ, மாணவிகள் சோக்கைக்கான விண்ணப்பப் படிவத்தினை இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் மே 23 மாலை 5 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு ஆடுகள தகவல் தொடா்பு மைய கைப்பேசி எண் 95140 00777 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews