ஆசிரியர்கள் மே நான்காவது வாரம் பள்ளிக்கு வருகை புரிதல் சார்பு -முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 15, 2023

Comments:0

ஆசிரியர்கள் மே நான்காவது வாரம் பள்ளிக்கு வருகை புரிதல் சார்பு -முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்

2023-24 Identification and updating of primary education register of school-bound children (including children with disabilities and children of migrant workers) aged 6 to 18 years - All types of school (Primary / Middle / High / Higher Secondary) Principals and teachers - School attendance Comprehension - Dependency - Proceedings of the Principal Education Officer - 2023-24ஆம் ஆண்டில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள் (மாற்றுத்திறனுடைய குழந்தைகள் மற்றும் இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கண்டறிதல் மற்றும் ஆரம்பக் கல்வி பதிவேடு புதுப்பித்தல் - அனைத்து வகை பள்ளி (தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை) தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் - பள்ளிக்கு வருகை புரிதல் - சார்பு.

திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

பார்வையில் காணும் மாநிலத்திட்ட இயக்குநரின் செயல்முறைகளின்படி, 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளைக் (மாற்றுத்திறனுடைய குழந்தைகள் மற்றும் இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கண்டறிய சிறப்பு கணக்கெடுப்பு பணி ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களிலும், மே இறுதி வாரத்தில் நடைபெற கூறப்பட்டது. பார்வை(2)ன் படி, இதில் அனைத்து வகை பள்ளி (தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை) தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மே மாத நான்காவது வாரத்தில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் பொருட்டு பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளி செல்லா குழந்தைகளை குடியிருப்பு வாரியாக கள ஆய்வு செய்ய கூடுதல் மாநில திட்ட இயக்குநர் - 2 அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

எனவே மே மாத நான்காவது வாரம் தொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவதை அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களும், உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கணக்கெடுப்புப்பணியில் ஈடுபடுவதை மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கநிலை, இடைநிலை), மாவட்டக்கல்வி அவலர் (தனியார் பள்ளிகள்) கண்காணித்து உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திருநெல்விே மாவட்டத்தில் பள்ளி செல்லா மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டுமென மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்க மற்றும் இடைநிலை) . மாவட்டக்கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மற்றும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், அனைத்து தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள்(பொ), ஆசிரியர் பயிற்றுநர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews