மத்திய அரசு துறைகளில் 1,600 பணி இடங்கள் - 8-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 31, 2023

Comments:0

மத்திய அரசு துறைகளில் 1,600 பணி இடங்கள் - 8-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்

மத்திய அரசு துறைகளில் 1,600 பணி இடங்கள் அடுத்த மாதம் 8-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் 1,600 Vacancies in Central Government Departments - Last Date to Apply on 8th

சென்னை, மே.26- மத்திய அமைச்சக அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் உள்பட மத்திய அரசுக்கு பாத்தியப்பட்ட பல்வேறு அலுவலகங்களில் 1,600 பணி இடங்களை நிரப்புவ தற்கான அறிவிப்பினை மத்திய அரசு பணியாளர் தேர்வா ணையம் (எஸ்.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது.

இதன்படி, 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலைசெயலகஉதவியாளர், டேட்டாஎன்ட்ரிஆபரேட்டர் உள்ளிட்டபணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படஉள்ளனர். சில பணிகளுக்கு கூடுதல் தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள் ளது.இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 8-ந்தேதி கடைசி நாள் ஆகும். ஆகஸ்டு 1-ந் தேதியன்று 18 வயது நிரம் பியவர்கள் முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப் பிக்கலாம். எஸ்.சி. எஸ்.டி. பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி. சி. பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு கணினி வழியில் முதல்நிலை தேர்வு ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. முதன்மை தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு https://ssc.nic.in/என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட தகவல் மத்திய அரசின் பணியாளர் நலன் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews