அரசு மருத்துவமனையில் வரும் 13-ம் தேதி 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، مايو 10، 2023

Comments:0

அரசு மருத்துவமனையில் வரும் 13-ம் தேதி 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வரும் 13-ம் தேதி 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

கடலூர்: சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வரும் 13-ம் தேதி 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.

108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவையில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு வரும் 13-ம் தேதி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட, பிஎஸ்சி நர்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (12-ம் வகுப்பு) அல்லது லைஃப் சயின்ஸ் பட்டதாரிகள் (பிஎஸ்சி ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோடெக்னாலஜி) இருபாலரும் பங்கேற்கலாம்.

மருத்துவ உதவியாளர் பணிக்கு ரூ.15,435 ஊதியம் வழங்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு அசல் சான்றிதழ் கட்டாயமாக எடுத்து வர வேண்டும். முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9154251145, 9566286831, 9154251148 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை 108 அவசர ஊர்தி சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாள‌ர் ஹரிகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة