தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு 70,000 பேர் விண்ணப்பம்!
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.
மாநிலம் முழுவதுமுள்ள 7,738 தனியார் பள்ளிகளில் சுமார் 85,000 இடங்கள் உள்ளன. இந்ததிட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம். வரும் கல்வியாண்டு (2023-24) இலவச மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தொடங்கியது. இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். வரும் மே 18-ம் தேதி வரை அவகாசம் உள்ளதால், விருப்பமுள்ள பெற்றோர் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
சேர்க்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் பள்ளிக்கல்வியின் உதவி மைய எண்ணுக்கு 14417 தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.