போலி நிதி நிறுவனங்களுக்கு சார்ந்த சொத்துக்கள் இடைமுடக்கம் செய்து அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 20, 2023

Comments:0

போலி நிதி நிறுவனங்களுக்கு சார்ந்த சொத்துக்கள் இடைமுடக்கம் செய்து அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போலி நிதி நிறுவனங்களுக்கு சார்ந்த சொத்துக்கள் இடைமுடக்கம் செய்து அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு பொருளாதார குற்றங்களை தடுப்பதற்காகவே தமிழக காவல்துறையில் பொருளாதாரக் குற்றப்பிரிவு என்ற பிரிவை அரசாணை நிலை எண். 1697. உள்(நீ.ம.-IIA) துறை, நாள் 24.121999 மூலம் அமைத்துள்ளது. இந்த பிரிவின் மூலம் போலி நிதி நிறுவனங்களின் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து அவற்றின் சொத்துக்களை பறிமுதல் செய்து முதலீட்டாளர்களுக்கு அவர்கள் இழந்த முதலீட்டுத் தொகையை திரும்ப பெற்றுத் தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இத்தகைய வழக்குகளை விசாரிப்பதற்கென தனியே மூன்று சிறப்பு நீதிமன்றங்கள் தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு சட்டம், 1997-ன் கீழ் முறையே சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூரில் அமைக்கப்பட்டு விரைவாக விசாரிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வகையில், தற்போது கீழ்கண்ட போலி நிதி நிறுவனங்களின் மீது வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவினால், மேற்படி நிறுவனங்களின் மீது, உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு, பாதிக்கப்பட்ட முதலீட்டுதாரர்கள் தங்களது வைப்பீட்டு தொகையினை மீள பெற ஏதுவாக, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம், 1997-ன் கீழ் போலி நிதி நிறுவனங்களுக்கு சார்ந்த சொத்துக்கள் இடைமுடக்கம் செய்து அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது:-

ட்ரீம் மேக்கர்ஸ் குளோபல் பிரைவேட் லிமிட்டெட், க.எண். 50/37, K.S. ராமசாமி கவுண்டர் தெரு, கே.கே.புதூர், கோயம்புத்தூர் என்ற நிறுவனத்தின் மீது வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில், உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு, மேற்கண்ட நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.1,58,50,999/- மதிப்பிலான அசையும் சொத்துக்கள் அரசால் இடைமுடக்கம் செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது

பிளசிங் அக்ரோ பார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், க.எண். E & 1K, காஜியார் வளாகம், வடக்கு வாசல் எஸ்.எஸ். காலனி, மதுரை என்ற நிறுவனத்தின் மீது வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில், உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு, மேற்கண்ட நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.13,11,330/- மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசால் இடைமுடக்கம் செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஜீவன் பிராப்பர்ட்டி புரோமோட்டர்ஸ் இந்தியா லிமிடெட், க.எண். 12. முதல் தளம், பட்டரைகார தெரு. கோரி பாளையம், மதுரை என்ற நிறுவனத்தின் மீது வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில், உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு. மேற்கண்ட நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.56,11,541/- மதிப்புள்ள அசையா சொத்துக்கள் தற்போது அரசால் இடைமுடக்கம் செய்யப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. iv. சன் ஸ்டார் அக்ரோ பார்ம்ஸ் இந்தியா லிமிடெட், எண்.379, கிருஷ்ணன் தெரு, M.S. சாலை, கட்டயன்விளை, வெட்டூர்னிமடம் அஞ்சல், நாகர்கோவில், கன்னியாகுமரி என்ற நிறுவனத்தின் மீது வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில், உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு, மேற்கண்ட நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.22.00.000/- மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசால் இடைமுடக்கம் செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

v. ராஹத் ட்ரான்ஸ்போர்ட் கம்பெனி, எண். 20 ராஜா நகர், புதிய பேருந்து நிலையம், தஞ்சாவூர் என்ற நிறுவனத்தின் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு, மேற்கண்ட நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 59 வாகனங்கள் அரசால் இடைமுடக்கம் செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் மேற்கண்ட நிறுவனங்களுக்கு சொந்தமான ஏனைய காவல் துறையால் சொத்துக்களை இடைமுடக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, மேற்படி நிறுவனங்களில் வைப்பீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள், தங்களது வைப்புத் தொகையை திரும்ப பெற, தக்க ஆவணங்களுடன், பொருளாதாரக் குற்றப்பிரிவு, கூடுதல் காவல்துறை இயக்குநர் அலுவலகம், அசோக் நகர், சென்னை-600 083" முகவரியில் இயங்கி வரும் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews