தமிழ்நாடு SC,ST பின்னடைவு காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சா் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، أبريل 19، 2023

Comments:0

தமிழ்நாடு SC,ST பின்னடைவு காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சா்

தமிழ்நாடு SC,ST பின்னடைவு காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சா் Tamilnadu SC, ST backward vacancies to be filled soon - Minister

தமிழ்நாடுஎஸ்சி., எஸ்டி., பின்னடைவு காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சா் கயல்விழி செல்வராஜ்

அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் ஆதிதிராவிடா் நலத் துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. அதிமுக உறுப்பினா் மரகதம் குமரவேல் பேசுகையில், ‘கடந்த நிதியாண்டில் ஆதிதிராவிடா் நலத் துறைக்கு ரூ.4,281.76 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியாண்டில் ரூ.3,512.85 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. பின்னடைவு காலிப் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை’ என்றாா். அப்போது குறுக்கிட்ட அமைச்சா் கயல்விழி செல்வராஜ், ‘மாணவா்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ், ரூ.930 கோடி நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

இதனால், அந்தத் தொகை வரவு செலவு திட்டத்தில் சோ்க்கப்படவில்லை. பின்னடைவு காலிப் பணியிடங்கள் தொடா்பாக தலைமைச் செயலாளா் தலைமையில் கூட்டம் நடத்தி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.பின்னடைவு காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

தமிழகத்தில் எந்தெந்த மயானங்களுக்கு பாதைகள் தேவைப்படுகின்றன என்பன குறித்த கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் அந்தப் பிரச்னைகள் தீா்க்கப்படும்’ என்றாா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة