அறை கண்காணிப்பாளர் வழிகாட்டி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، أبريل 03، 2023

Comments:0

அறை கண்காணிப்பாளர் வழிகாட்டி!

. .அறை கண்காணிப்பாளர் வழிகாட்டி.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். | என்ற குறளின் படி
ஆகச் சிறந்த ஆசிரியர்களைகத் தேர்ந்தெடுத்து செயற்கரிய செய்வார் பெரியார் என்ற வாக்கிற்கு ஏற்ப தேர்வுப் பணி நம்மிடம் கல்வித்துறை ஒப்படைத்துள்ளது.
மாணவர் உள நலம் / உடல் நலம் கருத்தில் கொண்டு முழு பாதுகாப்போடு/ சுகாதாரத்தைப் பேணுதல் நம் தலையாய கடமை.
மையத்திற்கு தேர்வர் வருகைபுரிந்ததில் இருந்து தேர்வு எழுதி வெளியேறும்வரை உரிய நேரத்தில் உரிய பணியினைத் திறம்பட செய்து தேர்வர்களுக்கு வழிகாட்டுதல் அவசியம்.
🌷கட்டுப்பாட்டு அறையில். 1. மையத்திற்கு
8.30 am வருகை புரிதல் செல்போனை அணைத்து ஒப்படைத்தல்..பேட்ஜ் அணிதல்
2. வருகை கையொப்பம்
3. குலுக்கல் முறையில் அறை தேர்வு
4.அறைக்கு உரிய பை பெறுதல்
5. பையின் உள்ளே
a. விடைத்தாள் கொண்ட ஸ்பெஷல் எண்கள் ஒட்டப்பட்ட பிரவுன் உறை
b. தேர்வர் வருகைப்பதிவு படிவம்
c. ஹால்டிக்கெட்
d கூடுதல் விடைத்தாள்
f. சிறு கத்தி . 6. விடைத்தாள் முகப்புத்தாளில் மு.கண்காணிப்பாளர் பேசிமலி.. விடைத்தாள் பிரவுன் உறையில் ஒட்டப்பட்ட தேர்வர் எண்கள் படிவம்..
தேர்வர் வருகைப் பதிவு ( ‌‌attendance sheets)தாள்கள்.. விடைத்தாட்களின் முகப்புச் சீட்டு ஒப்பிட்டு....நுழைவுச் சீட்டு ஆகியன சரிபார்க்க வேண்டும்.
7. விடைத்தாளின் முகப்புச்சீட்டின் part.A வின் வலப்புறம் மேல் பகுதியில் உரிய இடத்தில் Verified என எழுதி சுருக்கொப்பம்.
8. அறைக்கு செல்ல தயார்படுத்திக் கொள்ளல்
9. 9.40am க்கு வினாத்தாள்
உறை மற்றும் அறைக்கு உரிய bag, blue pen.. red pen எடுத்து கொண்டு அறைக்கு செல்லுதல்.

🌷தேர்வறையில்
1. அறையை திறந்து முதலில் சென்று தேர்வருக்கான இருக்கை அமர்வு,காற்றோட்டம், வெளிச்ச வசதி ஏற்பாடு
2. தேர்வரை சோதிட்டு ஒதுக்கப்பட்ட 20 தேர்வரையும் அவரவர்க்கு உரிய இடத்தில் அமரச்செய்தல்.
( மிதியடி..பெல்ட் வெளியே)
கைக்குட்டை/ சானிடைசர் அனுமதிக்கலாம்.
3.பள்ளி மாணவர்கள் சீருடையில் தான் அனுமதிக்கப் படுவர்.
4.ஹால்டிக்கெட் வழங்குதல்.
5. 9.55am வினாத்தாள் உறை பாதுகாப்பு தன்மை விளக்கி இருதேர்வரிடம் பதிவெண் எழுதி கையொப்பம் பெற்று cut செய்தல். 10.00am வினாத்தாள் வழங்கல்..
6. ‌10.10 வரை தேர்வரை வினாத்தாள் மட்டுமே பார்க்க அனுமதித்தல்.( அச்சு தெளிவாக அனைத்து பக்கங்களில் உள்ளதை உறுதி செய்க) பதிவு எண் எழுதச் சொல்லுதல்.
7. ‌10.10 am விடைத்தாள்
வழங்கல். முகப்புச் சீட்டில் உள்ள விவரம் தங்களுடையது தானா என சரிபார்த்தல்.. விடைத்தாள் மொத்த பக்கமும் பக்க வாரியாக சோதிக்க அறிவுறுத்தல்...
மொத்த பக்கங்களின் எண்ணிக்யும் சரிபார்த்து தேர்வரின் கையொப்பம் பெறுதல். 8. ‌10.15 am "start writing" என கூறுதல்
9. . வருகை பதிவுத்தாளில் தேர்வர் கையொப்பம்.
விடைத்தாளில் blue டிக் செய்து கண்காணிப்பாளர் கையொப்பம்.
10. ‌அறைக்கு வரும் பதிவேட்டில் வராதோர் எண் எழுதி கையொப்பம்.
விடைத்தாள் உறையில்blue pen கொண்டு P/ red pen கொண்டு ABSENT எழுதுதல் 11. 10.30 am வராதோர் விடைத்தாளின் முகப்புச் சீட்டில் red tick மற்றும் கையொப்பம். ஹால் டிக்கெட்டில் சுருக்கொப்பம்.
12.. வராதோர் வினாத்தாள்- விடைத்தாள் ஒப்படைப்பு.
13. கண்காணிப்பு பணி இடையிடையே தேவைப் படின் வருகை படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் பெற்று கூடுதல் விடைத்தாள் வழங்கல்
14. ‌1.10 pm ஹால்டிக்கெட் சேகரித்து உறையில் வைத்தல்
15. ‌ 1.15 pm stop writing and Stand up நிகழ்த்தி எழுதாத பக்கங்கள் அனைத்திலும் பேனாவால் குறுக்குக் கோடிட அறிவுறுத்துதல். வரிசையாக விடைத்தாள் பெற்று உறையிலிடுதல்
அறையை சோதித்துவிட்டு தேர்வர்களை செல்ல அனுமதித்து( விளக்கு பேன் off செய்தபின்பு)தாமும் கட்டுப்பாட்டு அறைக்கு விரைதல். 🌷கட்டுப்பாட்டு அறையில்
1. கவனமாக DGE/SSLC (விடைத்தாள் மேல் பகுதியில் பக்கங்கள் சந்திப்பு பகுதியில்)முத்திரை இடல். விடை முடிவுறும் இடத்திலும் முத்திரை இடல்.
2. Part - A பிரிப்பு.
Part-A எண்ணிக்கை விடைத்தாள் எண்ணிக்கை சரிபார்ப்பு.
( Tic mark, present/absent மார்க், கையொப்பங்கள், பேசிமலி...etc) பிரிக்கப்பட்ட part-A உடன் விடைத்தாள்கள் சரிபார்த்து
3.முதன்மை கண்காணிப்பாளர்/ துறையலுவலர் முன்னிலையில் விடைத்தாள்களை ஸ்பெஷல் பிரவுன் உறையில் வைத்து ஒட்டி கையொப்பம் இடல்.
Part- A ..pin செய்துவழங்குதல்
4.CSD பூர்த்தி செய்தல்
5.அறைக்கு உரிய பை -யில் உள்ள எஞ்சிய பொருட்களை ஒப்படைத்தல்.
6. கட்டுகள் தயார் செய்வதை பார்வையிடல்
7. அனுமதி பெற்று இன்றைய பணி சிறப்பாக அமைந்ததை எண்ணி மகிழ்வுடன் செல்லுதல்.
தேர்வர்கள் மகிழ்வோடும் வசதியோடும் பிழையின்றி விவரங்களை தெளிவாக சரிபார்க்க தேர்வறையில் உரிய நேரத்தில் ரத்தினச் சுருக்க அறிவிப்பு அவசியம்.
அருவினை என்ப உளவோ கருவியாலா காலமறிந்து செயின். என்பதை நாம் கற்பித்தும் கடமையாற்றியும் வருவதால் ...தேர்வுப் பணி சிறப்பாகவும் செம்மையாகவும் அமைந்திட வாழ்த்துகள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة