"அனைவருக்கும் ITM" திட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கிறார் - பள்ளிக் கல்வி ஆணையர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، أبريل 03، 2023

Comments:0

"அனைவருக்கும் ITM" திட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கிறார் - பள்ளிக் கல்வி ஆணையர்

"அனைவருக்கும் ITM" திட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கிறார் Hon'ble Chief Minister of Tamil Nadu Mr.M.K.Stalin participates in "ITM for All" Program - Commissioner of School Education

இடம் : டி.டி. ஜெகன்னாதன் அரங்கம், சென்னை ஐ.ஐ.டி வளாகம் நாள் : 03.04.2023 காலை 10 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்:

அவர்கள் 03.04.2023 அன்று காலை 10 மணிக்கு சென்னை ஐஐடி வளாகத்தில், “அனைவருக்கும் IITM" திட்டம் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நம் நாட்டின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் முதனமை நிறுவனமான சென்னை ஐஐடியை கிராமப்புற மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக உருவாக்கப்பட்ட திட்டம் "அனைவருக்கும் ITM'. சென்னை ஐஐடி வாயிலாக 250 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 500 அறிவியல் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் வாயிலாக 1 வட்சம் மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள மின்னணு செய்முறை பெட்டகங்களை அப்பள்ளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக் கல்வித துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை ஐஐடியின் இயக்குநர் முனைவர் வீகாமகோடி பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திருமநி காகர்லா உஷா இ.ஆ.ப், ஐஐடி பேராசிரியர்கள், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்,

நிகழ்விற்கு தங்கள் செய்தி நிறுவனத்தில் இருந்து செய்தியாளரை அனுப்பி செய்தி சேகரிக்குமாறு வேண்டுகிறோம்.

ஆணையர் பள்ளிக் கல்வி

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة