குரூப் 1 ரிசல்ட் வெளியீடு 2,162 பேர் மட்டுமே பாஸ்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، أبريل 29، 2023

Comments:0

குரூப் 1 ரிசல்ட் வெளியீடு 2,162 பேர் மட்டுமே பாஸ்!

குரூப் 1 ரிசல்ட் வெளியீடு 2,162 பேர் மட்டுமே பாஸ்!

துணை கலெக்டர், துணை கமிஷ்னர் உள்ளிட்ட 92 காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது.

3.22 லட்சம் பேர் விண்ணப்பித்து, 1.9 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.

தற்போது இந்த தேர்வுக்கான ரிசல்ட் வெளியாகி உள்ளது. அதில் 2,162 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதல்நிலை தேர்வில் பாஸ் ஆனவர்கள் முதன்மை தேர்வுக்கு தயாராகலாம்.

தேர்வு கட்டணம் 200 ரூபாய். 2,162 பேருக்கு ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை முதன்மை தேர்வு நடத்தப்படும்.

மே 8 முதல் 16ம் தேதிக்குள் தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. > தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 19.11.2022 அன்று நடத்தப்பெற்ற தொகுதி - I முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது,

இதன் தொடர்ச்சியாக 10.08.2023 முதல் 13.08.2023 வரை நடைபெற இருக்கின்ற முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மனிதநேயம் இலவச IAS பயிற்சி மையத்தின் மூலம் நடைபெற உள்ளது, இப்பயிற்சியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு இலவச நேரடி பயிற்சி வகுப்புகள், பாடக் குறிப்புகள், தொடர் மாதிரித் தேர்வுகள், தேர்வுக்கான பின்னூட்டம்(feed back) மற்றும் உதவி தொகை வழங்கப்படும்.

வெற்றி பெற்ற மாணவர்கள் முதன்மை தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான அனைத்து பயிற்சிகளும் பணியில் உள்ள அரசு அதிகாரிகள், அனுபவம் மிக்க ஆசிரியர்கள் மற்றும் வல்லுனர்களால் வழங்கப்படும்.முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் www.mntfreeias.com இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة