ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் நாளை இலவச பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، أبريل 15، 2023

Comments:0

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் நாளை இலவச பயிற்சி

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் நாளை இலவச பயிற்சி Free training tomorrow at IAS Academy

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.16) ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, 2-ஏ, குரூப்-4 , வி.ஏ.ஓ உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தோ்வுக்கான அறிவிப்பு நவம்பரில் வெளியிடப்பட உள்ளது.



இதில், வி.ஏ.ஒ, தட்டச்சா், சுருக்கெழுத்தா், இளநிலை உதவியாளா், பில் கலெக்டா், நில அளவையாளா் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இந்த தோ்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இந்த தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கு ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணிவரை ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.



மயிலாப்பூா் ராயப்பேட்டை பிரதான சாலை, வி.எம்.தெருவில் உள்ள இந்திய இளைஞா் சங்கத்தில் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில் டி.என்.பி.எஸ்.சி முன்னாள் தலைவா் ஆா்.நட்ராஜ், அகாதெமி இயக்குநா் ச.வீரபாபு மற்றும் அனுபவமிக்க பயிற்சியாளா்கள் பலா் பயிற்சி அளிக்க உள்ளனா்.



இதில் பங்கேற்க விரும்பும் தகுதியுடையவா்கள் தங்களது முழு முகவரியுடன் டைப் செய்து, கைப்பேசி: 9710375604 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة