தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாத திமுக* ஏமாற்றத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 01, 2023

Comments:0

தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாத திமுக* ஏமாற்றத்தில் பகுதிநேர ஆசிரியர்கள்

தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாத திமுக ஏமாற்றத்தில் பகுதிநேர ஆசிரியர்கள்

2012 முதல் அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. திமுக ஆட்சி அமைந்த உடன் நாங்கள் விரைவில் பணிநிரந்தரம் செய்யப்படுவோம் என சந்தோசப்பட்டோம்.கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் எங்களுக்கான பணிநிரந்தர அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்தோம்.இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையிலாவது எங்களுக்கான நல்லதொரு அறிவிப்பு வரும் என்று ஆவலோடு 12,000 ஆசிரியர்களும் காத்திருந்தோம்.ஆனால் இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் எங்களைப் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லாதது கண்டு மனம் வேதனை அடைகிறோம். வாரத்தில் மூன்று அரை நாட்கள் மட்டும் வேலைக்கு செல்வதால் எங்களுக்கு பள்ளியிலும்,சமூகத்திலும் ஏன் வீட்டிலும் கூட மரியாதை இல்லை.எனவே உடனடியாக பணிநிரந்தரம் செய்ய இயலாத பட்சத்தில் தற்காலிக தீர்வாக ஊதியத்தை உயர்த்தி அனைத்து வேலை நாட்களிலும் முழுநேர வேலையாவது வழங்குங்கள் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்.அமைச்சரும் எங்கள் கோரிக்கை குறித்து நம்பிக்கையான வார்த்தைகளை அளித்தார்.அமைச்சரின் வார்த்தைகளை நாங்களும் முழுமையாக நம்பினோம்.ஆனால் எங்களின் நம்பிக்கை பொய்த்து போனது.

இந்த நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் முடிவதற்குள்ளாவது 110 விதியின் கீழ் எங்களுக்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆசிரியர்களின் மகிழ்ச்சியே அரசின் மகிழ்ச்சி என்று அடிக்கடி சொல்லும் அமைச்சர் எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவார் என நம்புகிறோம். ஒரு வேளை இந்தக் கூட்டத்தொடரில் எங்களுக்கான அறிவிப்பு வரவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டத்தை நடத்தும் முடிவில் உள்ளோம்.

பழ.கௌதமன்,

மாவட்ட பொறுப்பாளர்,

திருப்பூர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews