CPS -ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أبريل 02، 2023

Comments:0

CPS -ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு.



CPS -ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு - One-Day Contingent Leave Protest Demanding Abolition of CPS - CPS Abolition Movement Announcement

27.06.2023 ( செவ்வாய் ) அன்று புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது . அதே போல் தற்செயல் விடுப்பு போராட்டம் வெற்றி பெற அனைத்து துறை மற்றும் பொதுச் சங்கங்களின் ஆதரவை கோருவது எனவும் முடிவு செய்யப்பட்டது .

ஐயா,

கீழ்க்காணும் நாளிதழ்/ஊடகத்தில் கொள்கிறோம். பத்திரிக்கை செய்தியினை தங்களது பிரசுரம் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் பத்திரிக்கை செய்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் | கூட்டம் மதுரை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன் தலைமையேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் பி.பிரெடெரிக் எங்கெல்ஸ் எதிர்கால போராட்ட நடவடிக்கைகளை முன்மொழிந்தார். மற்றுமொரு மாநில ஒருங்கிணைப்பாளர் மு.செல்வகுமார் மாவட்டங்களில் வந்திருந்த அவர்கள் நிறைவுரையாற்றினார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் விவாதத்திற்குப் பிறகு கீழ்க்காணும் இயக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சரவணன் நன்றி கூறினார். கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள்:

தொடர்ச்சியாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் உரிமைகளைப் பறித்தும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கொச்சைப்படுத்தியும், நிதி மேலாண்மை எனக் காரணம் கூறி அரசுத் துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுகளை வேகமாக்கும் நிதி அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் தனது கண்டனத்தை பதிவு செய்கிறது.

மாநில மாநாட்டு அறைகூவல் தீர்மானத்தின் அடிப்படையில் எதிர்வரும் 12.04.2023 (புதன் கிழமை) அன்று புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி சட்ட மன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி சட்டமன்ற கட்சித் தலைவர்களைச் சந்தித்து முறையீடுவது என முடிவெடுக்கப்பட்டது.

2023-24-ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சிபிஎஸ் இரத்து செய்வது தொடர்பாக எவ்விதமான அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில் 19.04.2023 அன்று ஓய்வூதியம் தொடர்பான மானியக் கோரிக்கை நடைபெற உள்ளதால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 17.04.2023(திங்கள்) மாலை மாவட்டத் தலைநகரங்களில் "கவன ஈர்ப்பு பேரணி”-யை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. சிபிஎஸ்-இல் பணிபுரிந்து இறந்த அரசு ஊழியர், ஆசிரியரின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்கும் மாநிலம் அல்லது 2 இடங்களில் 19.05.2023(வெள்ளி) உண்ணாவிரதம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

27.06.2023(செவ்வாய்) அன்று புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

அதே போல் தற்செயல் விடுப்பு போராட்டம் வெற்றி பெற அனைத்து துறை மற்றும் பொதுச் சங்கங்களின் ஆதரவை கோருவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அகில இந்திய அளவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வரும் NATIONAL MOVEMENT FOR OLD PENSION SCHEME அமைப்புடன் இணைந்து ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய அளவில் போராட்டங்களை முன்னெடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

CPS Press Report
CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة